திருவண்ணாமலை : (09.11.2023)-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின், மேற்பார்வையில் காவலர்கள் இணைந்து தானிப்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இணைய வழியில் மோசடி நபர்களால் ஏற்படுத்தப்படும் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு சைபர் கிளப் அமைக்கப்பட்டது.