வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பாக குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 400 நபர்களுக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுக்கள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான செயலிகளில் பெரும் கடன்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 1930 உதவி எண், cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து அவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.