மதுரை : மேலூர் அருகே புதிதாக வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே மோதல், ஏடிஎஸ்பி வாகனம், ஆம்புலன்ஸ் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், காவல்துறை ஆய்வாளர் திரு.சார்லஸ் காவல்துறை உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயம், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாப்பட்டி புதூர் மந்தைதிடல் அருகே அனுமதியின்றி 5 அடி உயரம் கொண்ட சிமெண்டால் செய்யப்பட்ட தேவர் சிலை வைக்கப்பட்ட நிலையில், இதை அகற்றுவது தொடர்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்குதல், இதில் காவல்துறை உதவி ஆய்வாளர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காவலர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காவல்துறை வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார்,IPS தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி