மதுரை : மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் பகுதிகளில், தொடர்ந்து தெருக்களில் மாநகராட்சி சார்பில் பெரிய பள்ளங்கள் தோண்டப்படுவதால் இது சக்கர வாகன செல்வோர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அவதியடையும் ஒரு நிலை ஏற்படுகிறது. மதுரை மாநகராட்சி சார்பில் ,பாதாள சாக்கடை பணிக்காக அவ்வப்போது சாலைகளில் மூலம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது. அவ்வாறு தோண்டப்படும் போது, சாலையின் குறுக்கே உள்ள குழாய்கள் உடைக்கப்பட்டு, கழிவுநீர் ஆனது சாலைகளில் பெருக்கெடுத்து நிற்கிறது. அத்துடன் தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்ததாரர்கள் சரிவர மூடப்படாமல், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது .
இது குறித்து, சமூக ஆர்வலர் கூறியது. மதுரை மாநகராட்சி சார்பில் ஒரு தெருவில் பள்ளம் தோண்டும் போது, அதை சரி செய்து விட்டு, அடுத்த தெருவில் பள்ளங்கள் தோண்டினால், பொதுமக்கள் தெருக்களி சென்று வர ஏதுவாக இருக்கும் .
ஒரே நேரத்தில் அனைத்து தெருக்களிலும் பள்ளங்கள் தோண்டப்படுவதால், குடியிருப்பு வாசிகள் சாலையில் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளன் கவனத்திற்கு கொண்டு சென்று கூட சாலையில் தோண்டப்படும் பள்ளங்களை சரிவர மூட ஒப்பதுதார்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும் மதுரை அண்ணா நகர் வீரவாஞ்சி தெரு, ராஜராஜன் தெரு, காதர் மொய்தீன் தெரு, அன்பு மலர் தெரு, உள்ளிட்ட தெருக்களில் சாலைகள் சரியாக மூடப்படாததால், அவ்வழியாக செல்வோர் கால் இடறி கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது.
இது குறித்து ,மதுரை மாநகராட்சி பொறியாளர்கள் உரிய கவனத்தில் எடுத்துக் கொண்டு சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. வீரவாஞ்சி தெருவில், சாலைகள் சரியாக மூடப்படாதால் இரவு நேரத்தில் 2 பேர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சாலைகளில் சாக்கடை நீரும் ராசராசன் தெரு, வீரவாஞ்சி தெருவில் செல்வதால், பொதுமக்கள் சாலைகளில் செல்ல இடையூறாக உள்ளது என, ஜீவராஜ் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி