சேலம் : மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் நிகழ்வுக்கு செல்வதற்காக (24/07/23), காலை சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கார் மூலம் தொப்பூர் சென்றார். தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.அருண் ஐ.பி.எஸ், அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் அவர்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான மூலம் சென்னை சென்ற பிறகு காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. அருண் ஐ.பி.எஸ் அவர்கள், தலைமையில் மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு சுதாகர் ஐ.பி.எஸ் சேலம் மாநகர காவல் ஆணையர் திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாக்கூர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கண்ணன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜவகர் மற்றும் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் திரு. கௌதம் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்