சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த வெள்ளையன் (36) மேட்டூர் மூர்த்தி (29) SPI காலனி பின்புறம் ஜீவா நகர் மேட்டூர் பிரகாஷ் முப்பது மேட்டூர் நிவாஸ் (30) மேட்டூர் ஆகியோர்கள் கொலை கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர்களை மேட்டூர் காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்து சேலம் மத்திய சிறையில் இருந்தவர்கள் மீது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிநவ், அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பெயரில் இன்று மாவட்ட ஆட்சியர் திரு.கார்மேகம் அவர்கள் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மேலும் மேற்படி குற்றவாளிகள் மீது சேலம் மாவட்டத்தில் மேட்டூர் கருமலை கூடல் ஆகிய காவல் நிலையங்களில் பல கொலை கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்