திண்டுக்கல்: கொரோனா தொற்றை.தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் அனைத்து தொழில்களும் முடங்கியதால் தொழிலாளர்களுக்கும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் லுள்ள. மேடை கலைஞர்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்துள்ளனர் இவர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குறிஞ்சி ரோட்டரி சங்கத்தின்.பட்டயச் செயலாளர் ராஜேஸ் கண்ணா தலைமை வகித்தார் கொடைக்கானல் டி.எஸ்.பி. திரு.ஆத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 30 மேடை கலைஞர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மேடை கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் செயலாளர்கள் அஜய் ராபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் குறிஞ்சி லயன்ஸ் கிளப் சார்பில் தினமும் 100 பேருக்கு இலவச உணவு பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சி கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள எலெக்ட்ரிக் கடையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மதிய உணவு தேவைப்படுபவர்கள் கடையில் எடுத்துக்கொள்ளலாம் இந்த இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியானது தொடர்ந்து 15 நாட்களுக்கு வழங்கப்படுமென குறிஞ்சி லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் கிளப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.