தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 30 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு எதிரிகள் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறப்பாக ஆளுமை செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன் மற்றும் காவலர் திரு. கார்த்திக் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
சாயர்புரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சிகளை துரிதமாக ஆஜர் செய்து எதிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் கிடைக்கச் செய்த சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. கைலயங்கிரிவாசன் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு துப்பு துலக்கி வழக்கின் எதிரியை கண்டுபிடித்து கைது செய்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர், காவலர் திரு. விசு ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 09.02.2021 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்தி நிறுத்தாமல் வந்து கொண்டிருந்த லாரியை ஓட்டபிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட குறுக்குசாலையில் மடக்கி பிடித்த ஓட்டபிடாரம் காவல் நிலைய காவலர் திரு. ஜான்சன் என்பவரின் மெச்சுதகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைந்துபோன மற்றும் தவறவிட்ட 61 கைபேசிகளை கண்டுபிடித்த சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன், உதவி ஆய்வாளர்கள் திரு. சுதாகரன், திரு. பெர்லின் பிரகாஷ், தலைமை காவலர் திரு. சுப்புராஜ், காவலர்கள் திரு. திலீப், திரு. பேச்சிமுத்து, திரு. எடிசன், திரு. வசந்த பெருமாள், திரு. புவேனஷ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் போலியாக கருப்பு வைரக்கல் வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ய முற்ப்பட்ட எதிரிகளை கண்காணித்து கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் திரு. ரவிக்குமார், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முதல் நிலை காவலர் திரு. மாணிக்கராஜ், காவலர் திரு. மகாலிங்கம் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கடந்த 07.02.2021 அன்று மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து செய்த வந்த போது குலசை காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட மதன்ராஜ் என்பவரது பாரில் 14 மது பாட்டில்களும், குமார் என்பவரின் பாரில் 50 மது பாட்டில்களும், இராமசந்திரன் என்பவரது பாரில் 174 மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டு எதிரிகளை கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், முதல் நிலை காவலர் திரு. சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 31 மூடை புகையிலை பொருட்களை கைப்பற்றி எதிரியை கைது செய்ய உதவியாக இருந்த விளாத்திகுளம் பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. ஆதிலிங்கம், புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சின்னத்துரை, விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. காத்தணன், சூரங்குடி காவல் நிலைய காவலர் திரு. நவீன்குமார் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
எட்டையாபுரம் காவல் நிலைய மணல் திருட்டு வழக்குகளில் சட்ட விரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்களை கைது செய்த எடடையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜ், மெச்சதகுந்த பணிக்காகவும், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அசோகன், தலைமை காவலர் திரு. சரவணமுத்து, முதல் நிலை காவலர் திரு. சேதுராஜ், காவலர் திரு. சத்யநாராயணன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காவும்,
2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 30 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இப்பாராட்டு நிகழச்சியின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.