திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்களின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொள்ளை வழக்கில் மீட்கப்பட்ட பொருள்கள் மற்றும் களவு போன செல்போன்கள் உரியவர்களிடம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் வழங்கி, மெச்சத்தக்க பணிகளை செய்த திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையினருக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் பணவெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
மேலும் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையினர்களை சந்தித்து அவர்களின் நிறை, குறைகளை கேட்டறிந்து திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் மரக்கன்றுகளை ஊன்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ர கார்க், இ.கா.ப., அவர்கள் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர்.அபிநவ் குமார், இ.கா.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
