கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப., கோயம்புத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு.நரேந்திரன் நாயர்,இ.கா.ப., கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அர. அருளரசு,இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் 17.10.2020 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் மறறும் கருமத்தம்பட்டி உட்கோட்டங்களில் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது விரைவு விசாரணை நடத்தி தீர்வு கொடுக்கும் நோக்கில் மெகா பெட்டிசன் மேளா நடத்தப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட மெகா பெட்டிஷன் மேளா நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் இருந்து 29 பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர். கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சூரியமூர்த்தி அவர்களால் அன்னூர் காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட மெகா பெட்டிசன் மேளா நிகழ்ச்சியில் அன்னூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 30 பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர். கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் திரு. எஸ்.எம். சண்முகம் அவர்களால் அன்னூர் சூலூர் காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட மெகா பெட்டிசன் மேளா நிகழ்ச்சியில் சூலூர், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 27 பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு மெகா பெட்டிசன் மேளா நிகழ்ச்சியில் ஆக மொத்தம் 86 மனுதாரர்கள் குடும்ப பிரச்சனை, பணபரிமாற்ற பிரச்சனை, இடப்பிரச்சனை தொடர்பாக அளித்த மனுக்கள் அனைத்தின் மீதும் விரைவு விசாரணை நடத்தப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்