சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், கடந்த ஓராண்டுகளாக காணாமல் போன செல்போன்கள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.செந்தில்குமார், தரப்பில் சைபர் கிரைம் காவல்துறையினர், விசாரணை நடத்தினர். கடந்த ஓராண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 304 செல்போன்கள் காணாமல் போனதில், இதில் ரூபாய் முப்பத்தி மூன்று லட்சம் மதிப்புள்ள 207 செல்போன்கள் சைபர்க்ரைம் காவல்துறையினர், மீட்டனர். இந்த செல்போன்களை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் பேசுகையில் செல்போன் காணாமல் போனது பற்றி புகார் வந்தால் உடனடியாக செல்போனை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் திரு.முத்துச்செல்வம், அவர்கள் சிவகங்கை நகர இன்ஸ்பெக்டர் திரு.சுரேஷ்குமார், அவர்கள் சிவகங்கை தாலுக் இன்ஸ்பெக்டர் திரு.ரமேஷ், அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்