பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பிரேம்குமார் பிரேம்நாத் 24 த/பெ ராமலிங்கம் தெற்கு தெரு முருக்கன்குடி கிராமம் குன்னம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம். என்பவரையும், குன்னம் காவல் நிலைய குற்ற எண் 395/21 வழக்கின் எதிரிகள் 1.தோட்டி @ ரமேஷ் 39 த/பெ துரைசாமி, மேல தெரு, கீழப்பெரம்பலூர்,
குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். மற்றும் 2.முத்துகுமார் 31 த/பெ திருவளவன், கிழக்கு தெரு, கீழப்பெரம்பலூர், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் என்பவர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரீ வெங்கட பிரியா இ.ஆ.ப அவர்கள் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை