திருச்சி: திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சப்பூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காண்பித்து பணம் மற்றும செல்போன் வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் மணிகண்டம் பகுதியை சேர்ந்த சஞ்சீவி வயது 23, மற்றும் காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த மொகைதீன் அப்துல் காதர் வயது 23/24 த.பெ.பிஸ்மில்லாகான் ஆகிய இருவரை கைது செய்தும் மேலும் கடந்த 22.04.24-ந்தேதி, ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வயர்லெஸ் ரோட்டில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருபவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கத்தியை காண்பித்து மது அருந்த பணம் கேட்டதாகவும் தரமறுத்த தன்னிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்து சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தும், விசாரணை செய்தும், வழக்கின் குற்றவாளி டினோ @ வெற்றிவேல் வயது 23, என்பவர் கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், விசாரணையில் குற்றவாளி மொகைதீன் அப்துல் காதர் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 03 வழக்குகளும், எதிரி சஞ்சீவி மீது கோட்டை மற்றும் கண்டோன்மெண்ட் காவல் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கும் உட்பட 5 வழக்குகளும், டினோ@வெற்றிவேல் மீது கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, ஏர்போர்ட் காவல்நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு, கோட்டை காவல்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒரு வழக்கு உட்பட 03 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது
எனவே குற்றவாளிகள் சஞ்சீவி, மொகைதீன் அப்துல் காதர் மற்றும் டினோ @ வெற்றிவேல் ஆகியோரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றங்களில்; ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.