திருவண்ணாமலை: திருவண்ணாமலை, சிவசக்தி கோவில் தெருவை சேர்ந்த சந்துரு வ/22 த/பெ ரஜினி மற்றும் திருவண்ணாமலை, புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்த பிரசாந்த் வ/23 த/பெ கண்ணன் ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக திருவண்ணாமலை கிராமிய காவல் ஆய்வாளர் திருமதி.A.ஹேமமாலினி அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பரமனந்தல் கிராமம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த, பிச்சாண்டி வ/45 த/பெ ராஜிகண்ணு என்பவர், கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக செங்கம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.மலர் அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டார் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.B.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட மூன்று நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.