கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி காவல் நிலைய பகுதியில் நாருராம் என்பவர் சூளகிரி பஸ் நிலையம் முன்பு ஆன்லைன் கடை வைத்துள்ளதாகவும் (05.08.2023) ஆம் தேதி குற்றவாளிகள் மூன்று நபர்கள் கடைக்கு வந்து சுமார் 1/2 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க குண்டுமணிகளை கொடுத்து பணம் ₹2,500 ரூபாய் பெற்றுக் கொண்டதாகவும், குற்றவாளிகள் வருகின்ற (17.08.20230) ஆம் தேதி சுமார் ஒரு கிலோ தங்க குண்டுமணிகள் கொண்டு வந்து தருகிறோம். என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டதாகவும், தான் வாங்கிக் கொண்ட குண்டு மணிகளை சோதனை செய்து பார்த்ததில் போலியான தங்க முலாம் பூசியது என தெரிந்தது என்றும் (17.08.2023) ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணிக்கு மூன்று நபர்களும் ஒரு கருப்பு பாலித்தின் பையில் சுமார் ஒரு கிலோ 900 கிராம் எடை கொண்ட தங்கமுலாம் பூசிய குண்டு மணிகளை எடுத்து வந்து கொடுத்து ஐந்து லட்சம் ரூபாய் கேட்டவர்களை பிடித்து சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு சூளகிரி போலீசார் வந்து போலியான தங்கத்தை விற்பனை செய்ய வந்த மூன்று நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர், நாருராம் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்