சேலம் : மேச்சேரி காவல் நிலைய சரகம் மேட்டுப்பட்டி மலுவன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (71) என்பவருக்கும் முத்துக்குமரன் (50), சாம்ராஜ் பேட்டை மேச்சேரி என்பவர்களுக்கும் நிலம் சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடாசலம் அவரது தறிக்கொட்டாயில் தூங்கிக் கொண்டிருந்தவரை அங்கே வந்த குற்றவாளிகள் முத்துக்குமரன், கன்னியப்பன், கலைமணி, ஆகிய மூன்று பேர் ஒன்று சேர்ந்து கம்பியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக மேச்சேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது மேட்டூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் குழந்தைவேல், அவர்களால் விசாரணையில் இருந்தது இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு (15/11/ 2022),-ம் தேதி ஆயுள் தண்டனையும் தலா 15,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்