திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில் தனிப்படை குழுவைக் கொண்டு ஜியபுரம் காவல் உட்கோட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளத்தனமாக செல்போன் மூலமாக மூன்று இலக்க லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை, புகாரின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதும் பின்பு அவர்கள் செல்போனை சோதனை செய்த பொழுது அவர்கள் மூன்று இலக்க லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்ததை தொடர்ந்து அவர்களிடம் 780 ரூபாய் ரொக்க பணம், 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்