திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த பழவேற்காடு ஊராட்சி ஒரு சுற்றுலாத்தலமாக திகழும் இந்த இடம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக 1700 களின் இந்த பழவேற்காட்டில் டச்சுக்கள் வாழ்ந்ததாக வரலாறு இருக்கிறது. அப்படி வாழ்ந்த சிலர் இங்கு வந்து பின்பு இறந்துள்ளனர். அவர்களின் சிலரின் கல்லறை இங்கு ஒரு பகுதியில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் பிரியா. இவர் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தவர்.
இவரிடத்தில் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒருவர் சமஸ்கிருதம் தமிழ் படிப்பதற்காக வருகிறார். அவரிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாக பிரியா அவரை திருமணம் செய்து கொண்டு நெதர்லாந்து செல்கிறார். அங்கு இவர்கள் நல்லபடியாக வாழ்ந்து ஒரு பெண் ஒரு மகன் என இரு பிள்ளைகளை பெற்றெடுக்கின்றனர். பிரியா அவரின் வாழ்ந்த ஊருக்கு தன் பிள்ளைகளை இரண்டு முறை மட்டும் இதுவரை அழைத்து வந்துள்ளார்.
அதில் மகன் ஆறு வயது இருக்கும் பொழுது ஒருமுறை வந்ததாகவும் தற்பொழுது மகன் 22 வயதை கடந்தவராக இருக்கிறார். மேலும் பிரியாவின் மகன் எஸ்ரன்த் கூகுள் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்வது வழக்கம் அப்படி தங்களின் மூதாதையர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள் என்பது குறித்து பார்த்த பொழுது பழவேற்காட்டில் டச்சுக்கள் வாழ்ந்ததை அவர் படிக்கின்றார். மேலும் அதன் காரணமாக ஏழு நாட்களுக்கு முன்பாக சென்னை வந்த பிரியா மற்றும் அவரின் மகன் எஸ்ரன்த் இருவரும் பழவேற்காட்டில் உள்ள டச்சுக்கள் கல்லறையை பார்ப்பதற்காக வந்தனர். மேலும் பிரியாவிற்கும் அவரின் மகனுக்கும் நன்கு டச் எழுத்துக்கள் தெரியும் அதை ஒவ்வொரு கல்லறையிலும் பார்த்து படித்து இந்த கல்லறைக்குள் யார் இருக்கிறார் என்பதையெல்லாம் அவர்கள் படித்து தெரிந்து கொண்டனர். பின்பு நமக்கும் அதைப்பற்றி விளக்கங்கள் அளித்தனர். ஒரு சுவாரசியமான வெளிநாட்டு இந்திய பெண்ணின் குடும்பத்தின் கதையில் நம்முடன் அவர்கள் பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு