சேலம் : சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்டம் பூலாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இருப்பாளி, பூசாரிமூப்பன் வளவை சேர்ந்த (80) வயது மூதாட்டி ஒருவர் அங்கு நடைபெற்ற கோவிலில் திருவிழாவிற்கு 20/5/2023) ஆம் தேதி சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் இரவு சுமார் 9:30 மணி அளவில் சுமார் (30) வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் மேற்படி மூதாட்டியை அருகில் இருந்த இருட்டான வயல்வெளிக்கு இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேற்படி மூதாட்டி நேற்று இரவு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு (21/5/2023) பிற்பகல் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மூதாட்டி இடம் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்