சேலம்: சேலம் மாநகரம் இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலைகிரி பகுதியில் வசித்து வரும் முத்து (57) என்பவர் தனது தாயார் பழனியம்மாள் (75) என்பவரை 20 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கொடுத்த புகாரின் பேரில், காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.Pதங்கதுரை அவர்களின் மேற்பார்வையில், மேற்கு சரக காவல் உதவி ஆணையர்கள் திரு.N.K.செல்வராஜ், திரு.C.R.பூபதிராஜன், காவல் ஆய்வாளர்கள் திரு.S.செந்தில், திரு.M.தனசேகரன்,SIs திரு.அங்கப்பன், திரு.G.ராமகிருஷ்ணன் மற்றும் மேற்கு சரக குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டதில் காரைக்காடு, வேடுகத்தாம்பட்டி பழனிச்சாமி என்பவரின் மகன் பாலாஜி (20) என்பவன் மூதாட்டியின் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்துச் செல்வதற்காக வேண்டி அவரை கொலை செய்ததாகவும், அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து தப்பி சென்றதாகவும் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கொலை குற்றவாளியை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்.I.P.S., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.