விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் 06.02.2022 ம் தேதி ஒரு வயதான பெண்ணிடம் சுமார் 20 பவுன் நகை திருடப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சபரிநாதன் அவர்கள் மேற்பார்வையில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு வட்ட ஆய்வாளர் திரு.வீர சோலை அவர்கள் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.பாண்டி லட்சுமி, உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரவி, தலைமைக்காவலர்கள் திரு. கணேசன், திரு. இசக்கிராஜ், முதல் நிலைக்காவலர் திரு.சசிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் கிடைத்த வீடியோ ஆதாரங்களை வைத்து மதுரை கல்மேட்டைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி முத்து என்ற முத்துமாரி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 20 பவுன் தங்க நகைகளை கைப்பற்றி சட்ட விதிகளுக்கு உட்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
மேலும் சிறப்பாக செயல்பட்டு நகை திருடிய பெண்ணை கைது செய்த, மாவட்ட காவல் துறயினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.