விருதுநகர்: விருதுநகர் ரயில்வே காலனியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் 12.06.2021 அன்று காலை கடைவீதியில் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது,
மூதாட்டிக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் லோன் வாங்கி தருவதாக சொல்லி மூதாட்டியை நம்ப வைத்து அவரது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு விருதுநகர் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலி மற்றும் வலையல்களை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதுசம்பந்தமாக மூதாட்டி சூலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர், IPS., அவர்கள் உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் திரு.A.ராம்ராஜ் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி.S.கார்த்திகா, தலைமை காவலர் திரு.N.சரவணக் குமார், முதல் நிலைக் காவலர்கள் திரு.R.முரளிதரன், திரு.S.கணேசன் மற்றும் திரு.T.சரவணன் உட்பட தனிப்படை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்ததுடன் வழிப்பறி செய்த நகைகளை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த செயலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.