தஞ்சை : கும்பகோணம் வட்டிக் குருக்கள் தெரு துரை காலனியில் வசித்து வரும் சேகர் மகன் செந்தில்குமார் 32 (450) (திருமணம் ஆகவில்லை) என்பவர் ஊர்காவல் படையில் சுமார் 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றி ஏற்பட்டது அதனை தொடர்ந்து செந்தில்குமார் தஞ்சை மருத்து கல்லூரியில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனால் நோயின் தாக்கம்த குறைந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவரை மீண்டும் கொரோனா தொற்று தாக்கியதை தொடர்ந்து மீண்டும் தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்கள் இந்நிலையில் நேற்று (8-9-2021 ) இரவு திடீரென்று மூச்சி திணறல் ஏற்பட்டுள்ளது இதனை கண்ட மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டா நிலையில் அது பலனிக்காமல் இன்று காலை திரு. செந்தில்குமார் இயற்கை எய்தினார்.
மருத்துவர்கள் தந்த சிகிச்சையினால் கொரோனா தொற்று நீங்கி இருந்தாலும் அதனின் பாதிப்பால் தங்களுடைய சக நண்பர் உயிர் இழந்ததால் கும்பகோணம் பகுதி ஊர்காவல் படையினர் இடையே இந்நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்