இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து ஓமைக்ரான் பரவலை தடுப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நடைபெறும் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி.தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆளினர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கியும் , உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார்.அத்துடன்ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும்,
வெளியில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து, முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்