சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியோா், ஆதரவற்றோா்களுக்கு அன்றாடம் உணவு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 7 வது கட்ட தளர்வில்லா ஊரடங்கின் 5வது ஞாயிற்றுக்கிழமையில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு, காவல்துறை உதவியுடன், போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மதிப்புக்குரிய வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் T. கோவிந்தராஜ் அவர்கள், துவங்கி வைத்தார். காவல் ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ், அவர்கள் தன் கரங்களால் ஆதரற்றோருக்கு உணவு வழங்கியதோடு மட்டுமல்லாமல், சமூக இடைவெளி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முழு ஊரடங்கை நாளான நேற்று, போரூர், ஆலப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், குமணன் சாவடி, பூந்தமல்லி, பகுதியில் உள்ள சாலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முகக் கவசம், வெஜிடேபிள் பிரியாணி, 1 லிட்டர் தண்ணீர் பாட்டில், சுமார் 1500 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் சொல்லிற்கிணங்க, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். அனைவரும் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும், உணவு பொருட்களை வாங்கி சென்றனர்.
[embedyt] https://www.youtube.com/watch?v=pQuQDwf0C28[/embedyt]