திண்டுக்கல்: போலீசார் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். செய்தி மற்றும் ஊடகத் துறையினரை தடுக்கக்கூடாது. அதுபோல் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள், மருந்து கடை ,நாட்டு மருந்து கடை ,கால்நடை மருந்து கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சரக்கு வாகனங்கள் வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கவேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் வருபவர்கள் இறப்புக்கு மட்டும் இ-xdபதிவு சான்றிதழ் வைத்துள்ளனரா என்று சோதனை செய்ய வேண்டும்..
தடையை மீறி ஊர்சுற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைக்கு, மருந்துக் கடைகளுக்குச் செல்வர்களை அனுமதிக்க வேண்டும்.
தடையை மீறி ஊர்சுற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவகங்கள் காலை 6:10 மணிவரையும் மதியம் 2 முதல் 3 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது .பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இவற்றை போலீசார் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு டிஐஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா