மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில், கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சன்னதி தெரு ,பெரிய ரதவீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் தினந்தோறும் தங்ககுதிரை வாகனம், தங்கமயில் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருவது வழக்கம். பங்குனித் திருவிழாவின் மூன்றாவது நாளாக அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி