கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமன் தீர்த்தம் கிராமத்தில் உள்ள முருகன் என்பவரது அம்மாவிற்கும், அவரின் வீட்டின் அருகே குடியிருக்கும் குற்றவாளிக்கும் பொது பாதையில் போடப்பட்டிருக்கும் வேகத்தடையை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் 05.12.2021-ம் தேதி தனது தாயிடம் குற்றவாளிகள் பிரச்சினை செய்யும் விவரம் அறிந்து முருகன் மற்றும் இவரது சித்தி மகன் செந்தில் ஆகியோர் 15:00 மணிக்கு சம்பவ இடம் சென்று பிரச்சனை சம்பந்தமாக விசாரிக்க அங்கிருந்த குற்றவாளிகள் முருகனை கெட்டவார்த்தையால் திட்டி கட்டை மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் அடித்து காயப்படுத்தி விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஊத்தங்கரை காவல் நிலைய போலீசார் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.