விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் புலியூரான் 62. கீழவயலியில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் பூலியூரானுக்கும், அதே ஊரை சேர்ந்த ஆறுமுகவேல் 60, அவரது மகன் தாமரைகண்ணன் 35. ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ஆறுமுகவேல், தாமரைகண்ணன் ஆகிய இருவரும் புலியூரானை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் காயமடைந்த புலியூரான் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகனை தேடி வருகின்றனர்.