கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமாலம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியின்போது.
வாத்தியம் இசைப்பது சம்பந்தமாக வாதியின் தம்பிக்கும், வாத்தியம் இசைத்தவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனைக்கேட்க சென்ற வாதியை குற்றவாளி கெட்ட வார்த்தைகள் திட்டி, கன்னத்தில் அடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தளி காவல் நிலைய போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்