அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சேர்ந்தவர் கருப்பையன் 50. அதே ஊர் சேர்ந்தவர் உலகநாதன் 57. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து கருப்பையன் மற்றும் உலகநாதன் இருவரும் விக்கிரமங்கலம் போலீசில் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.கருணாநிதி அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.