தேனி: ஆண்டிபட்டி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ரஞ்சித் குமார் என்பவரை சிவபாண்டி என்பவர் கொலை செய்ததாக இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிவபாண்டி என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்.
இவ்வழக்கு 21.02.2020-ம் தேதியன்று தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில்
நீதிபதி திரு.அப்துல்காதர்.BABL., அவர்கள் போலீசார் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் சிவபாண்டி என்பவர் குற்றவாளி என்பதை உறுதி செய்து ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு E. சாய் சரண்தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.