திருநெல்வேலி : வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியூர் சுந்தரவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50), இவருக்கும் வள்ளியூர் வடக்கு ரத வீதி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவருக்கும் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மணிகண்டன் செல்வராஜிடம் தகராறு செய்து அவரது இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்து, செல்வராஜிடம் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.பென்சன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.