சென்னை: பெசன்ட் நகரைச் சேர்ந்த 36 வயது பெண்மணி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் தான் ஒரு நாட்டினுடைய சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் 2017 ம் ஆண்டு பணி செய்து வந்தபோது, தனது நண்பர் பரணி என்பவர் மூலமாக அறிமுகமான டாக்டர் மணிகண்டன் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக மலேசியாவில் தொழில் முதலீடு செய்யபோவதாக கூறி பழகி வந்ததாகவும், நாளடைவில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 வருடங்களாக குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கி கட்டாயத்தின் பேரில் கருக்கலைப்பு செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமால் ஏமாற்றி அடித்து துன்புறுத்தி, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தும், ரவுடிகளை வைத்து கொலை செய்து விடுவதாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாக திரு.டாக்டர் மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரணி என்பவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டு W-19 அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் செய்ததின் பேரில் 29.5.2021 அன்று, W-19 அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சட்டபிரிவுகள் 417,376,313,323, 506 (i) IPC, 67A IT Act படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது.