சென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் துாதராக பணிபுரிந்த போது தான் இந்தியா வந்ததாகவும்,
அப்போது பரணி என்பவர் மூலம் ராமநாதபுரத்தை சேர்ந்த மருத்துவரும் முன்னாள் தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சருமான மணிகண்டன் (வயது 43) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டதாகவும், இந்நிலையில் அவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 5 வருடமாக தன்னுடன் வசித்து வந்ததாகவும், அப்போது தன்னிடம் பலமுறை கட்டாயபடுத்தி பாலியல் உறவில் ஈடுபடுத்தியதோடு தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக கட்டாய படுத்தி மூன்று முறை கருகலைப்பு செய்யவைத்ததாகவும்.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது அடித்து காயப்படுத்தியதோடு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் எனவே அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 28.05.2021 ம் தேதி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்தார்.
அப்புகாரின் பேரில் W19 அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மணிகண்டன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து W19 அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் 20.06.2021 ம் தேதி பெங்களுருவில் தலைமறைவாக இருந்த வழக்கின் முதல் எதிரியான மணிகண்டனை காவல் குழுவினர் கைது செய்தனர்.மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.