தூத்துக்குடி : குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது – இந்த திருவிழாவை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், நேரில் சென்று ஆய்வு. குலசேகரன் பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (15.10.2023) கொடியேற்றத்துடன் தொடங்கி (25.10.2023) அன்று கொடியிறக்க நிகழ்ச்சியுடன் இத்திருவிழா முடிவடைகிறது.கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு இன்று 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 18 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்படி போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், குலசை முத்தாரம்மன் திருக்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.