இராமநாதபுரம்: கடலாடி அருகே ஆப்பனூர் கிராம பகுதிகளின் அனைத்து பகுதிகளும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு, தடுப்புகளை அகற்றும் வரை யாரும் வெளியே செல்லக்கூடாது. மேலும்கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அரசு உத்தரவை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.
ஆப்பனூர், கடலாடி, ஆ.புனவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வெளியேறுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றுபவர்கள், வெளியே செல்லுபவர்கள் காவல்துறை மற்றும் ஆளில்லா கேமிராக்கள், தற்காலிக ரகசிய கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதுகுளத்தூர் டி.எஸ்.பி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்