திண்டுக்கல்: கடந்த வாரம் பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்த லட்சுமி என்ற பெண்ணை நெய்க்காரப்பட்டி முதியோர் காப்பகத்தில் ,பழனி நகர் காவல் ஆய்வாளர் பாலகுரு அவர்கள்,தர்ம சக்கரம் மற்றும் விழுதுகள் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் சேர்த்துவிட்டனர்..சில தினங்களுக்கு பின் அப்பெண்மணிக்கு பக்க வாதம் ஏற்பட்டதையடுத்து இன்ஸ்பெக்டர் முயற்சியால் உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகுஇன்று பூரண நலம் பெற்று அந்த பெண்மணியால் நடக்க முடிகிறது.
அதன் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் செய்து காவல் ஆய்வாளர் பாலகுரு , தர்ம சக்கரம் நிர்வாகி கமலேஷ் மற்றும் விழுதுகள்நிர்வாகி குப்புசாமி ஆகியோர் பழனியிலுள்ள புண்ணியம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர்..
சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் உடனே குணமடைய முடிந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.