மதுரை: மதுரை மாவட்டம், மற்றும் விருதுநகர் மாவட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர், முதியோர் உதவித் தொகை மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகை, வங்கியில் கடன் பெற்று தருவதாகவும் புகைப்படம் எடுப்பதாக கூறி .
அவர்கள் காது மற்றும் மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அப்புறப்படுத்த கூறி, புகைப்படம் எடுத்ததுடன் அந்த நகைகள் அனைத்தையும் பறித்து மாயமாகி வருவதாக சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர்.
காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கோபி, திரு.மாரிகண்ணன், தலைமை காவலர் திரு.ராஜா திரு.கார்த்திக் கொண்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விருதுநகரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த கார்த்திக் 38. மற்றும் சரவணகுமார் 36. ஆகிய இருவரை பிடித்து விசாரித்ததில் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.மேலும் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
