திண்டுக்கல் : (31.07.2022), திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்நாயகன்வலசு கிராமத்தில் கடந்த (06.06.2022), ம்தேதி இரவு பணத்திற்காக முத்துச்சாமி (62), என்ற முதியவரை வடமதுரை பகுதியைச் சேர்ந்த இளையராஜா (27), மற்றும் பரமேஸ்வரன் (20), ஆகிய இரண்டு நபர்கள் கொலை செய்தனர். இவ்வழக்கில் அம்பளிக்கை காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இளையராஜா மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 02 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவை தொடர்ந்து அம்பளிக்கை காவல் நிலைய காவல்துறையினர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா