சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மூசா 73, என்பவர் கடந்த 03.10.2021 அன்று காலை தனது வீட்டிலிருந்த போது, அங்கு வந்த சிலர் மேற்படி மூசாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றுள்ளனர்.
மேலும் கடத்தல்காரர்கள் மூசாவின் இளைய மகன் செரீப்பை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து மூசாவின் இளைய மகன் பஷிர், J-12 கானாத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
J-12 கானாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில், மூசாவிடம் வேலை செய்த குமார் (எ) அறுப்பு குமார் என்பவர், மேற்படி மூசாவிடம் அதிக பணம் இருப்பதை தெரிந்துக்கொண்டு, அவரை கடத்திச் சென்று, அவரின் மகனிடம் பணம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
அதன்பேரில் காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி கடத்தல் வழக்கில் தொடர்புடைய 1) குமார் (எ) அறுப்பு குமார் 44, திருவாரூர் மாவட்டம் 2) பிரகாஷ் 33, மயிலாடுதுறை மாவட்டம் 3) சங்கீதா 28, மாதவரம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
கடத்தப்பட்ட மூசா பத்திரமாக மீட்கப்பட்டார். மேற்படி குற்றவாளிகளிடமிருந்து பணம் ரூ.25,000/- 3 தங்க மோதிரங்கள், 3 செல்போன்கள், 2 கைக்கடிகாரங்கள், 1 டம்மி துப்பாக்கி, 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்