மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 60. இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது சுப்பிரமணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி திரு.கிருபாகரன் மதுரம் தீர்ப்பளித்தார்.