சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நேற்று சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரை காவல்துறையினர் பாராட்டினர். திருப்பத்தூர் அருகே ஏரியூரைச் சேர்ந்தவர் தினகரன். இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் வைக்கும் இடத்தில் பணம் ரூ.20 ஆயிரத்தை தவறவிட்டு கவனக்குறைவாகச் சென்று விட்டார். பின்னர் பணம் தொலைந்து போனது குறித்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் குறிஞ்சிநகரைச் சேர்ந்த முருகேசன்(65), என்பவர் சாலையில் பணம் கிடந்துள்ளதாக காவல் நிலையம் வந்து கொடுத்துள்ளார். இதனையடுத்து பணம் தொலைத்தவரை காவல் நிலையம் அழைத்து அவரிடமே பணத்தை ஒப்படைத்தனர் காவல்துறையினர். முதியவரின் செயலை காவல் ஆய்வாளர் கலைவாணி, மற்றும் காவல் சார்பாய்வாளர் செல்வபிரபு, உள்ளிட்டோர் பாராட்டினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி