விருதுநகர்: அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே மேம்பாலத்திற்கு மேல்பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அருப்புகோட்டையை சேர்ந்த கலைமணி எனும் முதியவரிடம் நான்கு நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு, இருசக்கர வாகனத்தில் மதுரை நெடுஞ்சாலையில் தப்பி சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் உடனடியாக மதுரை நெடுஞ்சாலையில் உள்ள ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவல்துறையினர் ஆவியூர் சோதனை சாவடியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 நபர்களையும் மறித்து பிடித்து கைது செய்ததுடன் 2 3/4 பவுன் தங்க செயினையும் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட காவல் துறையினரின் இந்த செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS., அவர்கள் பாராட்டி வெகுமதி அளித்தார்கள்