திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தின் மற்றொரு எல்லையில் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி அடங்கிய அத்திப்பட்டு புது நகர் பகுதியில் புறக்காவல் நிலையம் புதியதாக அமைக்க வேண்டி பல்வேறு முயற்சிகளை அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் துணை தலைவர் எம்.டி .ஜி. கதிர்வேல் ஆகியோர் முயற்சியால். அதானி துறைமுகம், எண்ணூர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணெய் நிறுவனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் பயணிப்பதை கண்காணிக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கவனிக்கவும் புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி வைத்து குத்துவிளக்கேற்றி புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் மீஞ்சூர் காவல் நிலைய எல்லையில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதால் போக்குவரத்தை கண்காணிக்கவும், சட்டம், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கவனிக்கவும் புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு