திண்டுக்கல்: திண்டுக்கல்தமிழகத்தில் புதிய டி.ஜி.பி பொறுப்பேற்றுள்ள திரு.சைலேந்திர பாபு, திண்டுக்கல் முதல் எஸ்.பி.யாக ‘நக்சலைட் நாகராஜன் மீது நடத்திய முதல் என்கவுண்டர் மறக்க முடியாதது.பசுமை நினைவுகளாக திண்டுக்கல் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். தமிழக காவல்துறை தலைவராக (டி.ஜி.பி.) சி. திரு. சைலேந்திரபாபு பொறுப்பேற்றுள்ளார். இவர் முதன் முதலில் ஒரு வங்கியில் பணியாற்றினார். அப்போது கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க சென்றபோது , கடன் வாங்கியவர்கள் தர மறுத்தனர். நாளைக்கு தருகிறேன் என காலம் கடத்தினர். இதையடுத்து போலீசார் துணையுடன் அந்த பகுதிக்கு பகுதிக்கு சென்றபோது பணத்தை தந்துள்ளனர். இதையடுத்து தனது கனவில் போலீசாக வேண்டும் என்று தீர்மானித்து ஐ.பி.எஸ். தேர்வு எழுதி திரு. சைலேந்திர பாபு பெற்றார். இதன் பின்பு திண்டுக்கல் முதல் எஸ்.பி.யாக பதவியேற்றார். கடந்த 1990-களின் தொடக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய போது, பதுங்கி இருந்த நக்சலைட் நாகராஜன் என்ற வெடிகுண்டு நாகராஜனை சுட்டு வீழ்த்தியதுதான் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் முதல் என்கவுண்ட்டர். திண்டுக்கல் மாவட்டத்தில் 1960, 1970களில்தான் அன்று தீ. கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்பட்ட நக்சலைட்டுகள் நடமாட்டம் இருந்தது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் விவசாய கூலிகளாக நக்சலைட்டுகள் ஊடுருவி இருந்தனர். பின்னர் காலப்போக்கில் நக்சலைட் நடமாட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியில் மட்டும் அவ்வப்போது இருந்து வருகிறது. இந்த பின்னணியில் திண்டுக்கல்- பழைய கரூர் சாலையில் உள்ள குளத்தூர் என்ற கிராமத்தில் நக்சலைட் நாகராஜன் என்ற வெடிகுண்டு நாகராஜன் பதுங்கி இருப்பதாக எஸ்.பி.யாக திரு.சைலேந்திரபாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாகராஜனை பிடிக்க குளத்தூருக்கு தனி ஒருவராகவே சென்றார். நாகராஜன் பதுங்கி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது எஸ்.பி. திரு. சைலேந்திரபாபு மீது நாகராஜன் வெடிகுண்டுகளை வீசினார். இந்த வெடிகுண்டு வீச்சில் இருந்து தப்பியபடியே நாகராஜனை சுட்டு எஸ்.பி. கொன்றார். இது தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக பொறுப்புள்ள திரு. சைலேந்திரபாபுவின் மறக்கமுடியாத முதல் என்கவுண்டர், பசுமை நினைவுகள் என திண்டுக்கல் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.