விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி என்ற ஊரின் அருகில் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை அங்கு ரோந்து பணிக்காக சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு வசந்த் அவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தனது சொந்த வாகனத்தில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். இதனை கண்ட பலரும் அவரின் மனிதாபிமான செயலை பாராட்டி வருகின்றனர்.