தூத்துக்குடி : வருகின்ற (07.09.2022), அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. அஸ்ரா கார்க் இ.கா.ப, அவர்கள் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் விமான நிலையத்தின் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய சாலைகள் போன்றவற்றிலும் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி இ.கா.ப அவர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் இ.கா.ப அவர்கள், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. சந்தீஷ் இ.கா.ப அவர்கள், விமான நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. உமாதேவி, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.