சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ள இந்திய காவல் பணி(IPS) அதிகாரிகள் செல்வி.ரோமா ஸ்ரீவஸ்தவா, திரு.அங்கிட் ஜெயின், திரு.ராஜட் சதுர்வேதி, திரு.ஜி.சாந்தீஷ், திரு.சாய் பிரனீத், செல்வி.ஸ்ரேயா குப்தா, திரு.அபிஷேக் குப்தா, திரு.கௌதம் கோயல், திரு.பி. கே. அரவிந்த், திரு.அருண் கபிலன், ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
தலைமைச் செயலாளர் திரு.சண்முகம், IAS, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர், IAS, காவல்துறை தலைமை இயக்குனர் திரு .ஜே. கே. திரிபாதி, IPS ஆகியோர் கலந்து கொண்டனர்.