செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 77வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் விருது பெறும் காவல் துறையில் சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் து. திருநாவுக்கரசுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இதில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின், மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், சார் ஆட்சியர் (பயிற்சி) நல்லசிவம், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதேவி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முரளி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















